தாயைக் கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன்: மும்பையில் கொடூரம்

ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை அதிகாரி தியானேஷ்வரின் மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது மகனே ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
தாயைக் கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன்: மும்பையில் கொடூரம்


மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை அதிகாரி தியானேஷ்வரின் மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது மகனே ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

காவல்துறை ஆய்வாளர் தியானேஷ்வர் கனரின் மனைவி தீபாலி(42), செவ்வாய்க்கிழமை அவர்களது வெர்சோவா வீட்டில் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்து அவர்களது மகன் சித்தாந்த் காணாமல் போயிருந்தான்.

கொலை செய்யப்பட்ட இடத்தில், தீபாலியின் ரத்தத்தால் ஸ்மைலி வரைந்து, 'முடிந்தால் என்னைப் பிடித்துத் தூக்கில் போடுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல்  போயிருந்தது. 

முதலில் வெளிநபர் யாரோ இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த காவல்துறைக்கு, இந்த கொலையில், தீபாலியின் மகனே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திய சித்தாந்த் தற்போது தேசியக் கல்லூரியில் படித்து வந்தார். சித்தாந்த்தின் நடவடிக்கைகள் சில மாதங்களாக முரண்பாடாக இருந்ததாக அவர்களது நண்பர்களும் கூறியுள்ளனர்.

மகன் படிக்காததால், மனம் வெறுத்த தீபாலி, அவனது செலவுக்குப் பணம் கொடுப்பத்தை நிறுத்திவிட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதுபோன்ற ஏதேனும் ஒரு பிரச்னையில் தாய்-மகன் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தீபாலி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8-9 மணியளவில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவரது கணவர் தியானேஷ்வர் கனர் வீட்டுக்கு வந்த போதுதான் கொலை நடந்த சம்பவம் வெளியே தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் தீபாலியின் மகன் சித்தாந்த்தின் செல்பேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது 'லாக்' செய்யப்பட்டிருப்பதால் தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

'விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இப்போதைக்கு கொலையாளி யார் என்பதை சொல்ல முடியாது. அனைத்து தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருவதாக'க் காவல்துறையினர் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com