பிரம்மபுத்திரா நதி மீது இந்தியாவின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரம்மபுத்திரா நதி மீது இந்தியாவின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்


அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சீன எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த 9.15 கி.மீ. நீள ஆற்றுப் பாலம், 60 டன் எடை கொண்ட ராணுவ பீரங்கி வாகனங்களை ஓட்டிச் செல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில் சீன எல்லையையொட்டிய பகுதியில் ராணுவப் போக்குவரத்தை மேம்படுத்தவும், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களோடு இணைப்பு ஏற்படுத்தித் தரவும் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேச மக்களுக்கு நாட்டின் பிற பகுதிகளோடு இணைப்பை ஏற்படுத்தித் தர இந்தப் பாலம் உதவும். அதுமட்டுமன்றி, இந்திய ராணுவம் இந்தப் பாலத்தை பெருமளவில் பயன்படுத்தும்.

சீனாவையொட்டி இந்தப் பாலம் அமைந்துள்ளதால், போர்க் காலங்களில் ராணுவத்தினரையும், ராணுவ தளவாடங்களையும் எல்லையை நோக்கி மிக விரைவாக நகர்த்த இந்தப் பாலம் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் தலைநகர் திஸ்பூரிலிருந்து 540 கி.மீ. தொலைவிலும், அருணாசலப் பிரதேசத் தலைநகர் இடாநகரிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
 

இந்தியாவின் மீக நீண்ட பாலம் என்ற பெருமையை இதுவரை ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம் பெற்றிருந்தது. தற்போது இந்த பெருமையை பிரம்மபுத்திரா நதி மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com