தில்லி மருத்துவமனையில் கேஜரிவால் திடீர் ஆய்வு

தில்லி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தில்லி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் வியாழக்கிழமை  ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால். உடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.
தில்லி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால். உடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.

தில்லி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்த அவர், மருத்துவமனையின் பல பிரிவுகளில் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
தில்லி ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், அண்மையில் நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தேர்தலிலும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து, மக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கையில் தில்லி அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தினமும் ஒரு மணிநேரம் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க அதிகாரிகளுக்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதேபோன்று, தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், சாதனங்கள், மருத்துவக் கருவிகளின் செயல்பாடுகள் முழு அளவில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு தில்லியின் தலைமைச் செயலர் எம்.எம். குட்டிக்கு மூன்று தினங்களுக்கு முன்பு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தில்லி மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் கேஜரிவால் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர்.
அதிருப்தியும், திருப்தியும்: மருத்துவமனையில் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்த முதல்வர் கேஜரிவால், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள், பிற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பல நோயாளிகள் மருத்துவ சேவை திருப்தி அளிப்பதாகவும், சில நோயாளிகள் அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் மருந்து வழங்குமிடம் உள்பட பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று முதல்
வர் கேஜரிவால் ஆய்வு செய்தார்.
கேஜரிவால் பேட்டி: அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சஞ்சய் காந்தி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினேன். மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கல்வி, சுகாதாரத் துறைகளில் எந்தப் பணியையும் மேற்கொள்ளும் விவகாரத்தில் பணம் ஒரு பிரச்னை அல்ல என்பதில் அரசு உறுதியளித்துள்ளது.
இனி வரும் நாள்களில் இதுபோன்று மேலு சில அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன். தேவைப்படும் அனைத்து படிப்படியான மாற்றங்களும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com