பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் சதியை முறியடித்தது இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் படையினரின் சதித் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் படையினரின் சதித் திட்டத்தை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை முறியடித்தது. இதில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன், பாகிஸ்தானின் எல்லை அதிரடிப்படையினர் 2 பேர் வந்தனர்.
முன்னெச்சரிக்கையுடன் இருந்த இந்திய வீரர்கள், பாகிஸ்தான் எல்லை அதிரடிப்படையினர் 2 பேரையும் சுட்டுக் கொன்று விட்டனர். அவர்களது தாக்குதல் சதியையும் முறியடித்து விட்டனர் என்று இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே 2 பயங்கரவாதிகளின் சடலங்கள் கிடந்தன' என்றன.
பூஞ்ச் செக்டார் பகுதியில் ரோந்துப் பணியில் கடந்த 1-ஆம் தேதி ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் எல்லை அதிரடிப்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது 2 இந்திய வீரர்களை கொன்றுவிட்டு, அவர்களின் தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துவிட்டனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இந்தியா, இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com