கர்ப்பிணியை 8 கி.மீ. தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த மருத்துவர்: மரிக்காத மனிதநேயம்! 

ஒடிசாவில் மலைகிராமம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவர் ஒருவர் 8 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  
கர்ப்பிணியை 8 கி.மீ. தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த மருத்துவர்: மரிக்காத மனிதநேயம்! 

புவனேஸ்வர்: ஒடிசாவில் மலைகிராமம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவர் ஒருவர் 8 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

ஒடிசாவில் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ளது சாரிகேட்டா என்னும் மலை கிராமம். அங்கு வசித்து வந்த ஆதிவாசி இன பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஓம்கர் கோடா (31) என்னும் மருத்துவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் சற்று சிக்கலாக இருந்தது. அத்துடன் கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உண்டானது. ஆனால் அங்கிருந்து அரசு பொது மருத்துவனயானது 8 கி.மீட்டர் தொலைவிலிருந்தது.

அதற்கு ஏற்ற வாகன வசதிகள் எதுவும் இல்லாததால் அவரை அங்கிருந்து தூக்கித்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் உதவிக்கு யாரும் வராத காரணத்தால் ஓம்கர் கோடாவே அப்பெண்ணை தூக்கிச் செல்ல முயன்றார். ஆனால் ஆதிவாசி இன வழக்கப்படி வேறு ஆண் நபர் பெண்களை தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சமயோசிதமாக சிந்தித்த மருத்துவர் ஓம்கர் கோடாவின் ஆலோசனையின் படி அந்த கர்ப்பிணி பெண் கட்டில் ஒன்றில் படுக்கவைக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணின் கணவரும், மருத்துவர் கோடாவும்  சேர்ந்து அக்கட்டிலை கடினமான மலைப் பாதைதில் சுமந்து கொண்டு சென்றனர் .

மூன்று மணி நேரம் சுமார் 10 கி.மீட்டர் தூரம் நடந்த பின்னர் பாபுலூர் என்ற இடத்தில் உள்ள பொது சுகாதார மைய ஆஸ்பத்திரியில் அந்த கர்ப்பிணி பெண் சேர்க்கப்பட்டார். பின்னர் தொடர்ந்த சிகிச்சையின் பலனாக அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தற்பொழுது தாயும் குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.

தன்னுடைய பதவி மற்றும் அங்கு நிலவிய சூழலைக்கண்டு அஞ்சாமல் மருத்துவர் ஓம்கர் கோடா மனிதாபிமானத்துடன் செயல்பட்டதனை அனைவரும் வெகுவாக பாராட்டினராகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com