அடுத்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி தலைமையில் ஆர்ஜேடி போட்டியா? லாலு பிரசாத் பதில்

அடுத்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னாள் துணை முதல்வரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) போட்டியிடும் என்று
அடுத்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி தலைமையில் ஆர்ஜேடி போட்டியா? லாலு பிரசாத் பதில்

அடுத்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னாள் துணை முதல்வரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) போட்டியிடும் என்று வெளியான தகவலை அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் சூசகமாக மறுத்துள்ளார்.
 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் ராம்சந்திர பூர்வே அண்மையில் பேசியபோது, பிகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்ஜேடி கட்சி அடுத்து ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
 இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த லாலு பிரசாதிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
 ஆனால் அதுபோன்ற திட்டம் எதுவும் கட்சியிடம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் சூசகமாக மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தலைமைப்பண்பு, பேச்சுத்திறன் ஆகியவற்றில் எங்களை விட அவர் முன்னேறுவதற்கு இன்னும் அதிக காலமுள்ளது' என்றார்.
 பிகாரில் வெள்ளிக்கிழமை முதல் 2 நாள்கள் நடைபெறவிருந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு அதிக அளவு நிதியை பிகார் அரசு செலவு செய்திருப்பதாக லாலு பிரசாத் குற்றம்சாட்டினார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், "மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு மாநில அரசு அதிக அளவில் நிதியை செலவிட்டிருந்தது. அதாவது, இந்த மாநாட்டால் விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்து இதற்கு நிதீஷ் அரசு ரூ.60 கோடி வரையிலும் செலவு செய்திருந்தது. ஹிந்தி திரைப்படப் பாடகர் ஒருவரது நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இவ்வளவு தொகை செலவழித்த நிலையில், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிகார் மக்களுக்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்' என்றார்.
 இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிகார் மின்சாரத் துறை அமைச்சர் விஜேந்திர பிரசாத் பதிலளிக்கையில், "ரூ.60 கோடி செலவு செய்திருப்பதாக அவர் (லாலு) கூறுவதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. செலவு முழுவதையும் மாநில அரசு செய்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது சொந்தப் பணத்தையே செலவு செய்தனர்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com