கர்நாடகத்தில் எதிர்ப்புகளுக்கு இடையே திப்பு சுல்தான் பிறந்த தினம் கொண்டாட்டம்

கர்நாடகத்தில் பாஜகவின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநில அரசு சார்பில் திப்பு சுல்தான் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கர்நாடகத்தில் எதிர்ப்புகளுக்கு இடையே திப்பு சுல்தான் பிறந்த தினம் கொண்டாட்டம்

கர்நாடகத்தில் பாஜகவின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநில அரசு சார்பில் திப்பு சுல்தான் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 மைசூரு மாகாணத்தை 1782 முதல் 1799 வரை ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தார். இதனால், திப்பு சுல்தான் விடுதலைப் போராட்ட வீரர் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அவர் ஹிந்துகளையும், கிறிஸ்தவர்களையும் அச்சுறுத்தி இஸ்லாமியர்களாக மத மாற்றம் செய்ய முயற்சித்தார் என்றும் கன்னட மொழிக்கு எதிராக பர்சிய மொழியை ஆட்சி மொழியாகக் கடைப்பிடித்தார் என திப்பு சுல்தான் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
 இத்தனை சர்ச்சைகளுக்கிடையே திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை ஆண்டுதோறும் நவ.10-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடுவது என கர்நாடக அரசு 2015- இல் முடிவு செய்தது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் திப்பு சுல்தான் பிறந்த தின விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
 இந்நிலையில், பெங்களூரு விதான செüதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதவிர, மைசூரு, மண்டியா உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திப்பு சுல்தான் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
 பேருந்து மீது கல்வீச்சு: திப்பு சுல்தான் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடிக்கேரியில் பாஜக எம்.எல்.ஏ. அப்பச்சுரஞ்சன், எம்.எல்.சி சுனில் சுப்ரமணியா தலைமையில் பாஜகவினர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, கர்நாடக அரசு பேருந்து மீது ஒரு சிலர் கல்வீசித் தாக்கினர். சாலையின் குறுக்கே மரங்களை வெட்டி சாய்த்து வாகன போக்குவரத்துக்கும் இடையூறு செய்தனர்.
 இதுதொடர்பாக அப்பச்சுரஞ்சன் உள்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர். குடகு மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. திப்பு சுல்தான் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு ,மாநிலம் முழுவதும் 54 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com