பின்னிருக்கையில் குழந்தையுடன் பெண்: கண்டுகொள்ளாமல் காரை இழுத்துச் சென்ற போலீஸ்! (விடியோ இணைப்பு)

சரியான இடத்தில் நிறுத்தப்படவில்லை என்பதற்காக, கார் ஒன்றை பின்னிருக்கையில் குழந்தையுடன் பெண் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் மும்பை போலீஸ் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியினை உண்டாகியுள்ளது.
பின்னிருக்கையில் குழந்தையுடன் பெண்: கண்டுகொள்ளாமல் காரை இழுத்துச் சென்ற போலீஸ்! (விடியோ இணைப்பு)

மும்பை: சரியான இடத்தில் நிறுத்தப்படவில்லை என்பதற்காக, கார் ஒன்றை பின்னிருக்கையில் குழந்தையுடன் பெண் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் மும்பை போலீஸ் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியினை உண்டாகியுள்ளது.

பரபரப்பான மும்பை நகரத்தின் சாலைப்பகுதி ஒன்றில் சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது அங்கு வந்த போக்குவரத்து போலீசார், சரியான இடத்தில் நிறுத்தப்படவில்லை என்பதற்காக அங்கிருந்த கார் ஒன்றை அகற்ற முயன்றுள்ளனர். அதற்காக கொக்கியில் மாட்டி காரை இழுக்கத் துவங்கியுள்ளனர்.

ஆனால் அந்த காரின் பின்னிருக்கையில் ஜோதி மாலே என்ற பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்துள்ளார். அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் போலீசார் கேட்பதாக இல்லை.

அத்துடன் தனக்கு உடம்பு முடியவில்லை என்று தனது மருத்துவ பரிந்துரைச் சீட்டையும் அந்தப் பெண் காண்பித்துள்ளார் ஆனாலும் அவரது வேண்டுகோள்களை போலீசார் பொருட்படுத்தவில்லை அந்த கார் தொடர்ந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளாது.

தற்பொழுது மும்பை போக்குவரத்து காவல் இணை கமிஷனர் அமிதேஷ் குமார் இந்த விவகாரம் தொடர்பாக அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com