அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது: உத்தரப்பிரதேச ஆளுநர் தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது என உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் புதன்கிழமை தெரிவித்தார்.
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது: உத்தரப்பிரதேச ஆளுநர் தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் கூறியதாவது:

அயோத்தி விவகாரம் சுமூகமாக நிறைவடைய பலர் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு தானாக முன்வந்து முயற்சி செய்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது. எனவே இவ்விகராம் சுமூகமாக முடிய யார் வேண்டுமானலும் முன்வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். அவர்களை நான் வரவேற்கிறேன்.

மேலும் இதில் அவர்களின் செயல் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். எது எப்படி இருந்தாலும் இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நான் ஒரு மாநிலத்தின் ஆளுநராக உள்ளேன். எனவே என்னால் அரசியல் தொடர்பான கருத்துக்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

முன்னதாக, அயோத்தி விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையிலான சுமூகப் பேச்சுவராத்தைக்கு நடுநிலையாக இருந்து உதவி செய்யத் தயாராக உள்ளதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com