குஜராத் பேரவைத் தேர்தல்: அறிவிக்கை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

குஜராத் சட்டப் பேரவை முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

குஜராத் சட்டப் பேரவை முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் முறைப்படி அன்றைய தினமே தொடங்கியது. முதல் நாளில் 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
குஜராத்தில் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் கட்டமாகவும்,டிசம்பர் 14-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புஜ், தலாஜா, பாவ்நகர் மேற்கு ஆகிய தொகுதிகளில் 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்று குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 21-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை முதல்கட்டமாக வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, புதன்கிழமை தில்லி செல்ல உள்ளதாக அந்த மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் ஐ.கே.ஜடேஜா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com