கேரளம்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (23). ஆர்எஸ்எஸ் நிர்வாகியான இவரை மர்மநபர்கள் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்தனர். கேரளத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இது அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலைச் சம்பவத்துக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் குற்றம்சாட்டின. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இந்நிலையில், ஆனந்தனைக் கொலை செய்ததாக திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபைஸ், கார்த்திக், ஜிதேஷ் ஆகிய மூன்று பேரை கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவர்களில் ஃபைஸ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஃபாஸில் என்பவரின் சகோதரர் ஆவார். இந்தக் கொலை வழக்கில் ஆனந்தன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
எனவே, பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் மூவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com