காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கே சொந்தம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமானது என்று முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, சனிக்கிழமை தெரிவித்தார். 
காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கே சொந்தம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முஸ்லிம்களை பாஜக மிரட்டி வருகிறது. இந்தியா அனைவருக்குமான நாடு. இங்கு ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவரும் வாழ சமஉரிமை உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

முன்பே ஒரு பாகிஸ்தானை இந்தியா உருவாக்கிவிட்டது. இந்தியாவை இன்னும் எத்தனை துண்டுகளாக்கி எவ்வளவு பாகிஸ்தான்களை இனி உருவாக்க ஆசைப்படுகிறது பாஜக. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது.

இதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களுக்கு உரியது. அதில் உரிமை கொண்டாட இந்தியாவுக்கு அருகதை கிடையாது. பாகிஸ்தான் என்ன கைகளில் வளையல் அணிந்துள்ளது என்று நினைத்தீர்களா? அவர்களிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உள்ளது. 

ஆட்சியாளர்களாகிய நீங்கள் அனைவரும் முழுப் பாதுகாப்புடன் அரண்மனைகளில் தங்கிவிடுவீர்கள். ஆனால் இங்கு எல்லைப் பகுதியில் வசித்து வரும் ஏழைகளின் நிலை உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் வசிக்கும் பகுதியில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவர்களிடத்தில் எங்களைச் சாகச் சொல்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com