போதிய விழிப்புணர்வில்லை: ஜிஎஸ்டி அமலாக்கத்தை விளாசிய மன்மோகன் சிங்

போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவசரகதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சனிக்கிழமை தெரிவித்தார்.
போதிய விழிப்புணர்வில்லை: ஜிஎஸ்டி அமலாக்கத்தை விளாசிய மன்மோகன் சிங்

நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது தற்போது பல பரிசோதனைகளுக்கு மத்தியில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது தேவையற்ற செயல் என்றும், இது மக்களின் மீதான சுமையை அதிகரிப்பதாகவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மக்களிடம் இருந்து கட்டாயம் வரி பிடுங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு கப்பர் சிங் டேக்ஸ் என்றுதான் அழைக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இத்திட்டத்தின் அமலாக்கம் குறித்து விளாசினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஜிஎஸ்டி என்பது காங்கிரஸ் கட்சியின் கனவுத் திட்டம். இதற்காக ஒவ்வொரு நகர்வும் மிக எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்கிற நடைமுறையை ஏற்படுத்த காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டது. 

ஆனால் தற்போது நடந்துள்ளது முற்றிலும் வேதனை அளிக்கிறது. தற்போது அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட இந்த ஜிஎஸ்டி பாஜக அரசின் முட்டாள்தனத்தை வெளிக்காட்டுகிறது. இதில் எந்த ஒரு செயலாக்கத் திட்டமும், போதிய விழிப்புணர்வு மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

மோடி அரசாங்கத்தின் இந்த ஜிஎஸ்டி முறையால் நாட்டில் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுக்கத் தோல்வியடைந்துவிட்டது. இதுவே காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்திருந்தால், பொறுமையுடன் அனைத்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு இடையூறு இன்றி ஜிஎஸ்டி திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com