இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தான் பெண்ணுக்கு விசா

இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தான் பெண்ணுக்கு நுழைவு இசைவுச் சீட்டு (விசா) அளிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தான் பெண்ணுக்கு விசா

இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தான் பெண்ணுக்கு நுழைவு இசைவுச் சீட்டு (விசா) அளிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
 வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, சுட்டுரையின் மூலம் சாடியா என்ற பெண் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், தனது தாயாருக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக விசா அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
 இதற்கு சுஷ்மா அனுப்பியிருக்கும் பதிலில், "நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யப்படும்; பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம், உங்களின் தாயாருக்கு விசா அளிக்கும்படி வலியுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
 பாகிஸ்தானைச் சேர்ந்த நாஸிர் மஹ்மூத் அகமது என்பவர், தனக்கு மருத்துவ விசா அளிக்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜுக்கு சுட்டுரை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம், அதுகுறித்து முடிவு செய்யும் என்று சுஷ்மா ஸ்வராஜ் பதில் அனுப்பியுள்ளார்.
 இதேபோல், சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹீரா அஸார் என்பவர், தனது தந்தைக்கு மருத்துவ விசா அளிக்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜுக்கு சுட்டுரை மூலம் செய்தி அனுப்பியிருந்தார்.
 இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பியிருக்கும் பதிலில், சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்தை அணுகுமாறும், அங்கு அவரது தந்தைக்கு மருத்துவ விசா அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com