'பத்மாவதி' பட நாயகி தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: அமைச்சர் டி.கே.சிவக்குமார்

'பத்மாவதி' பட நாயகி தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

'பத்மாவதி' பட நாயகி தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
 ஹிந்தி திரைப்படம் பத்மாவதிக்கு, வட இந்தியாவில் ஒரு சமுதாயத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து, அந்த படத்தில் நடித்த தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என பாஜக பிரமுகர் சூரஜ்பால் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திரைப்படத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து இருந்தால், அதனை சென்சார் போர்டிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதனை நீக்குவது குறித்து முடிவு எடுப்பார்கள். அதைவிடுத்து, திரைப்படத்தில் நடித்த கதாநாயகி, இயக்குநருக்கு மிரட்டல் விடுப்பது ஏற்கக்கூடியது அல்ல.
 மிரட்டல் விடுத்த சூரஜ்பாலை உடனடியாக போலீஸார் கைது செய்ய வேண்டும். பாஜக பிரமுகர் சூரஜ்பாலைக் கண்டித்து தேசிய அளவில் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். குறிப்பாக, மகளிர் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயலும் பாஜகவின் இந்த நடவடிக்கையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 நடிகை தீபிகா படுகோனே கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
 எந்த மொழியைச் சேர்ந்த கலைஞர்களாக இருக்கட்டும்; அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேசமயம், ஒரு சமுதாயத்தின் கெüரவத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையிலான கருத்துகளை திரைப்படங்களில் புகுத்தக்கூடாது என்றார் அமைச்சர் சிவக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com