அறிமுக தினத்திலேயே இந்தியாவில் அசத்திய 'ப்ளாக் ஃப்ரைடே' 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான 'ப்ளாக் ஃப்ரைடே' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுக தினத்திலேயே இந்தியாவில் அசத்திய 'ப்ளாக் ஃப்ரைடே' 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளில் நவம்பர் மாத கடைசி வெள்ளிக்கிழமையை 'ப்ளாக் ஃப்ரைடே' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த தினத்தின் போது பெரிய நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் மிகப் பெரிய சலுகைகளுடன் விற்பனையைத் துவக்கும்.

இதன் ஒரு பகுதியாக தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதை விடுத்து வீட்டில் இருந்தபடியே வின்டோ ஷாப்பிங் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

கடை வீதிகளில் இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்வும், இருக்கும் இடத்திலேயே அனைத்துப் பொருட்களும் சலுகை விலைகளில் கிடைப்பதும் தான் இந்த இணைய வழி ஷாப்பிங்குகளின் வெற்றியாக உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் பிரபலமான அமேசான் நிறுவனம் பல சலுகைகளை இந்த பிளாக் ஃப்ரைடே தினத்தில் அறிவித்தது. இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் பல பன்னாட்டு நிறுவனங்களும் இதன்மூலம் இந்தியாவில் கடை விரித்தது. அவற்றில் பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் பொருட்களை 70 சதவீத தள்ளுபடியுடன் சந்தைப்படுத்தியது. சுமார் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனையாகின. இவற்றில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற நிலையும் இருந்தது.

இதுகுறித்து இந்த நிகழ்வை இந்தியாவில் ஏற்பாடு செய்திருந்த ஸ்மிட்டன் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனர் ஸ்வாகதா சாரங்கி கூறியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக இந்த ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் திருவிழாவை துவங்கியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இதில் எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைத்து நிறுவனங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த ஒரு மாதமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியும், பாராட்டுதல்களும் சேர வேண்டும். பல பெரிய நிறுவனங்களின் பொருட்கள் இத்தனை சலுகைகளுடன் இந்தியாவில் விற்பனையாவது இதுவே முதன்முறையாகும். இதற்கான செயல்திட்டங்களை சரிவர செயல்படுத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் எங்களுடன் இணைந்து பணியாற்றிய மற்றும் விற்பனைக்காக பொருட்களை சந்தைப்படுத்திய அனைத்தும் நிறுவனங்களின் மாண்பும் காக்கும் வகையில் செயல்பட்டோம். அறிமுகத்திலேயே எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது மேலும் வரும் காலங்களிலும் தொடரும் என்று தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ஹாலோவீன் திருவிழா' மிகப் பிரபலம். அதனையொட்டியே இந்த ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் கொண்டாட்டங்களும் துவங்கும். இது தற்போது இந்தியப் பெருநகரங்களில் பெரும் ரசிகர்களையும், ஆதரவையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், இஸ்லாமிய கலாசாரங்களுக்கு கிறிஸ்துமஸ் எதிரானது என்பதால் பாகிஸ்தானில் இதுபோன்ற ஹாலோவீன் திருவிழா மற்றும் ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் ஆகியவை செயல்படுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com