காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிவினைவாத தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பகீர் குற்றச்சாட்டுகளை பிரிவினைவாதத் தலைவர் தாகீர் கிலானி சனிக்கிழமை முன்வைத்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிவினைவாத தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவர் தாகீர் கிலானி பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இதுகுறித்து அப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:

காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்று எங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் உள்ளதா? காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தானமாகும். 

தொலைக்காட்சிகளில் நம்மை ஆக்கிரமிப்பு பிரிவினைவாதிகளாக சித்தரிக்கின்றனர். இவை அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. இதுதொடர்பான முஸ்லிம்களின் கருத்தரங்கள் அனைத்தும் பணம் கொடுத்து செய்யக் கூடியவை. 

நம் வீட்டு குளியலறை மற்றும் கழிவறைகளில் கூட ''காஷ்மீர் விரைவில் பாகிஸ்தானில் இணையும்'' என்ற வாசகங்களை எழுதியுள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் உற்பத்தியாகும் உப்பு நம்மிடம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. வேறு எங்கும் இதுபோன்று இல்லை. 

ஆனால் பாகிஸ்தான் நம்மிடம் இருந்து செல்லும் குடிநீரை உபயோகிக்கிறது. ஹரியாத் தலைவர்களான மிர்வாஸ் உமர் ஃபரூக், தனது இல்லத்திலேயே 1990-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 

அதுபோல கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அப்துல் கனி லோனே அதேபோன்று கொலை செய்யப்பட்டார். இவை அனைத்துக்கும் பாகிஸ்தான் தான் காரணம். 

பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தல்களால் இந்தியா கடந்த 30 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது என்பது போன்ற பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com