ரூ.30 கோடி தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

ரூ.30.67 கோடி தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கு வருமானவரித்துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
ரூ.30 கோடி தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

ஆம்ஆத்மி கட்சி கடந்த 2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் தங்களின் கட்சி வருமானமாக ரூ.68.44 கோடி என தெரிவித்துள்ளது. ஆனால் ரூ.13.16 கோடி சொத்துகள் தொடர்பாக எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை.

அக்கட்சியின் வங்கிக் கணக்கில் நன்கொடை பெறப்பட்ட விவரங்கள் தொடர்பாக சரிவர பதிவு செய்யப்படவில்லை. ரூ.36.95 கோடி நன்கொடை விவரங்கள் தொடர்பாகவும் அக்கட்சியின் இணைய தளத்திலும் எந்த அறிவிப்பும் இல்லை. 

இதற்கான ஆவணங்களை பதிவு செய்ய அளிக்கப்பட்டிருந்த 34 வாய்ப்புகளையும் புறக்கணித்துள்ளது என்று வருமானவரித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ரூ.6.26 கோடி வரை ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை அளித்த சுமார் 461 நன்கொடையாளர்களின் முழு விபரங்களை பதிவு செய்திருக்கவில்லை.

எனவே ரூ.30.67 கோடி கணக்கு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com