சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் தெரியுமா? 

இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் தெரியுமா? 

அஹமதாபாத்: இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ளது சோம்நாத் கோவில். சிவனின் 12 ஜோதிலிங்ககங்களில் முதலானவதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. மேலும் இத்துடன் குஜராத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இங்கு சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகை தந்திருந்த பொழுது ஹிந்துக்கள் அல்லாதோர் கையெழுத்திட வேண்டிய பதிவேட்டில் கையெழுத்திட்டார் என்று சர்ச்சை எழுந்தது. அதனை ஒட்டி, சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

தற்பொழுது கோவிலின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதன் புனிதத்தன்மையினை பாதுகாக்கவுமே  இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோவிலின் கண்காணிப்பாளர் சஞ்சயபாய் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்துக்கள் அல்லாதோருக்கான தனிப் பதிவேட்டினைக் கையாளுவது என்பது நெடுங்காலமாகப் பின்பற்றி வரும் நடைமுறையாகும். எனவே சோம்நாத் கோவிலில் நுழைய விரும்பும் இந்துக்கள் அல்லாதோர் கண்டிப்பாக தங்கள் பற்றிய தகவல்களை தனியான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். கோவிலின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதன் புனிதத்தன்மையினை பாதுகாக்கவுமே  இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம்.

2015-இல் இருந்து கோவிலில் நுழைய விரும்பும் இந்துக்கள் அல்லாதோர் முறையாக பொது மேலாளரின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவிலின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com