சில்லறை 'சிகரெட் விற்பனை'க்கு தடை:  அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக பாக்கெட் அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும். சில்லறையில் (தனித்தனியாக)
சில்லறை 'சிகரெட் விற்பனை'க்கு தடை:  அரசு அதிரடி உத்தரவு!

பெங்களூரு: கர்நாடகாவில் சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக பாக்கெட் அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும். சில்லறையில் (தனித்தனியாக) விற்பனை செய்யக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் (விளம்பரங்கள், தடை மற்றம் விற்பனை, வர்த்தகரீதியான உற்பத்தி விநியோகம்) சட்டத்தின் 7 மற்றும் 8-வது பிரிவுகளின் படி, புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த எச்சரிக்கை படம், ஒரு பாக்கெட்டில் 80 சதவீதம் அளவு இருக்க வேண்டும். 

ஆனால், நுகர்வோர் முழு பாக்கெட்டை வாங்காமல், சிகரெட் மற்றும் பீடியை தனித்தனியாக வாங்குகின்றனர். எனவே, பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கை படத்தை அவர்கள் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. 

எனவே, இனிமேல், சிகரெட் மற்றும் பீடியை முழு பாக்கெட்டாக தான் விற்பனை செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புகையிலை பொருட்களை இளைய தலைமுறையினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. முழு பாக்கெட்டாக தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, அதை விலை கொடுத்து வாங்கும் வகையில் இளைய தலைமுறையினரிடம் போதிய அளவு பணம் இருக்காது. எனவே, அவர்கள் இந்த புகையிலை நுகர்வு பழக்கத்தை படிப்படியாக விட்டுவிட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com