மேகாலய ஆளுநராக கங்கா பிரசாத் பதவியேற்பு

மேகாலய மாநிலத்தின் 17-ஆவது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கங்கா பிரசாத் வியாழக்கிழமை பதவியேற்றார்.
மேகாலய ஆளுநராக கங்கா பிரசாத் பதவியேற்பு

மேகாலய மாநிலத்தின் 17-ஆவது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கங்கா பிரசாத் வியாழக்கிழமை பதவியேற்றார்.
மேகாலய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் வி. சண்முகநாதன் பொறுப்பு வகித்தார். இதனிடையே, அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தார். இதனால், மேகாலய ஆளுநர் பொறுப்பை அஸ்ஸாம் ஆளுநராக இருந்து வந்த பி. புரோஹித் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மேகாலயத்துக்கு புதிய ஆளுநராக கங்கா பிரசாத்தை குடியரசுத் தலைவர் அண்மையில் நியமனம் செய்தார். இதனையடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக அவர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
தொழிலதிபரான கங்கா பிரசாத், அரசியலில் தமக்கு இருந்த ஈடுபாடு காரணமாக பாஜகவின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தில் 1967-ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தார். பின்னர், பாஜக உருவானபோது அதிலும் இணைந்து தீவிர கட்சிப் பணியாற்றினார். அக்கட்சியில் பல்வேறு பொறுப்புககளையும் அவர் வகித்துள்ளார். பிகார் மேலவை உறுப்பினராக 18 ஆண்டுகளாக அவர் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com