ஜிஎஸ்டி: மக்கள் சக்தி முன்பு அடிபணிந்த ஆணவ ஆட்சியாளர்கள்

"ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. மக்கள் சக்தி முன்பு ஆணவ ஆட்சியாளர்கள் அடிபணிந்துள்ளனர்' என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி: மக்கள் சக்தி முன்பு அடிபணிந்த ஆணவ ஆட்சியாளர்கள்

"ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. மக்கள் சக்தி முன்பு ஆணவ ஆட்சியாளர்கள் அடிபணிந்துள்ளனர்' என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் 27 பொருள்களுக்கான வரிவிதிப்பைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அளிக்கவும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மக்கள் சக்திக்கு முன்பு ஆணவம் நிறைந்த ஆட்சியாளர்கள் அடிபணிய வேண்டி வந்தது. மக்களிடையே ஏற்பட்டிருந்த கொதிப்பை உணர்ந்த பின் அவர்களுக்கு (மத்திய அரசு) வேறுவழி இருக்கவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்புகளை தற்போது குறைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சாமானிய மனிதனுக்கும் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும். பணவீக்கத்தையும், எரிபொருள் விலைகளையும் குறைப்பதோடு, மின்வெட்டுகள் ஏற்படுவதையும் நிறுத்த வேண்டும்.
மக்கள், செல்வக் கடவுளான லட்சுமியை வழிபடும் நாளான தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களிடம் குறைந்த அளவே பணம் இருக்கிறது. ஏனெனில், மத்திய அரசு மேலும் மேலும் வரிகளை விதித்து மக்களிடம் கொள்ளையடித்து விட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையானது தீபாவளிப் பரிசு என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், நிச்சயமாக இது அப்படிப்பட்டதல்ல.
மக்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதா? அல்லது அவர்களைக் கசக்கிப் பிழிந்து விட்டு, தீபாவளிப் பரிசு அளிப்பதா? என்பதை ஆட்சியாளர்கள் பரிசீலித்தார்களா? ஜிஎஸ்டி வரி விகிதங்களை பின்னாளில் குறைப்பதாக இருந்தால் , முதலில் அவற்றை அதிக அளவில் விதித்தது ஏன்? அப்படியானால், ஏற்கெனவே மக்களிடம் இருந்து அதிகமாக வசூலித்த பணத்தை அவர்கள் திருப்பித் தருவார்களா?
மும்பை புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் பல்வேறு பொருள்களை விற்றபடி சுற்றித் திரிந்த நபர்கள் அகற்றப்பட்டதற்கு எங்கள் கட்சியே காரணம். புறநகர் ரயில் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தைத் தொடர்ந்து, சிவசேனையைச் சேர்ந்த அமைச்சர்கள் முதல்வர் ஃபட்னவீûஸச் சந்தித்து மனு அளித்த காரணத்தால்தான் அந்த நபர்கள் அகற்றப்பட்டனர். ஏனெனில், நெரிசல்கள் ஏற்பட இந்த நபர்களும் காரணமாக உள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com