இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்: அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்த ஆனந்திபென் படேல் 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்குமாறு முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் திங்கட்கிழமைதெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்: அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்த ஆனந்திபென் படேல் 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு அம்மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்.

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

நான் கடந்த 31 வருடங்களாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். பாஜக-வின் கொள்கைகளின் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும். எனவே அடுத்து வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கான புதிய தலைவர்களை உருவாக்க முடியும். இதர துறைகளைப் போன்று அரசியலுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எதிர்காலத்தில் பாஜக எனக்கு எந்த பொறுப்புகளை அளித்தாலும் அதனை சிறப்புடன் செய்து முடிப்பேன் என்றார்.

ஆனந்திபென் படேல், 1987-ல் பாஜக-வில் இணைந்தார். 2007 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில்  குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார். 

பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக ஆனந்திபென் படேல் நியமிக்கப்பட்டார். 

இதன்மூலம் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். 2016-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தவர் பின்னர் ராஜிநாமா செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com