'காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது': மாணவர்களுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவுரை! 

காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது என்று பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில்   பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
'காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது': மாணவர்களுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவுரை! 

பாட்னா: காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது என்று பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில்   பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரின் சாம்பரான் மாவட்டத்தில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா தற்பொழுது பிகார் முழுவதும் மாநிலக் கல்வித்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியின் வாழக்கை நிகழ்வுகளை மாணவர்களுக்கு கதையாக எடுத்துச் சொல்லும் தொடர் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக பாட்னாவின் 'ஞான் பவன்' அலுவலகத்தில் உள்ள சாம்ராட் அசோகா மையத்தில் சுமார் 800 மாணவர்களுக்கு மேல் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டு, காந்தியின் வாழக்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கதைகள் பற்றிப் பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:

தன்னுடைய வாழ்க்கை முழுக்க அனைத்து போராட்டங்களிலும் அஹிம்சையை கடைபிடித்தவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரே வன்முறைக்கு பலியாகி உயிர் நீத்தது மிகவும் வினோதம். காந்தி வேண்டுமானால் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகளை கொல்ல முடியாது. அவை என்றும் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உயிர்ப்புடன் இருக்கும்.

காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் ஒரு மனிதர். அவர் காட்டிய வழியைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வெறுமனே சிலைகளை அமைத்துக் கொண்டிருக்கக் கூடாது. காந்தி எடுத்துரைத்த ஏழு தீமைகளில் ஒன்றான உழைப்பில்லாமல் சேர்க்கும் செல்வம் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இது போன்ற நிகழ்வுகள் மாநிலத்தின அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க அவர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com