ஆளுநர்கள் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் 

மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த ஆளுநர்கள் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை தொடங்கிய ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை தொடங்கிய ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்.

மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த ஆளுநர்கள் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
மாநில, யூனியன் பிரதேச ஆளுநர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
ஆளுநர்கள் தாங்கள் பொறுப்பு வகிக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். 
மாநில மக்கள் நலனில் தங்களுக்கு உரிய பொறுப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஊழல், வறுமை, கல்லாமை, சுகாதாரச் சீர்கேடு இல்லாத புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.
மாநில எம்எல்ஏக்களுடன் ஆளுநர்கள் இணைந்து செயல்படும்போதுதான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய வடிவம் கொடுக்க முடியும். 
ஆளுநர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து மக்கள் நலப் பணிகள் குறித்து விரிவாக உரையாட வேண்டும்.
இந்த மாநாட்டின் மூலம் ஆளுநர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பாலமாக ஆளுநர் செயல்பட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஆதாரமாகத் திகழும் ஆளுநர்கள், அரசமைப்புச் சட்டத்துக்கு முன்னுரிமை அளித்து மாநில மக்களின் நலன்களைப் பிரதானமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
மக்கள் மீது கூடுதல் நம்பிக்கை: பாஸ்போர்ட் உள்ளிட்டவை வழங்கும் நடைமுறையில் பொதுமக்கள் மீது அரசு கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்களில் தாங்களே கையெழுத்திட்டு உறுதியளித்தால் போதுமானது என்று நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
"ஆளுநர்கள் சமுதாய மாற்றத்தின் பிரதிநிதிகள்': இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆளுநர்கள் நமது சமுதாயத்தை மாற்றும் பிரதிநிதிகளாகச் செயல்பட வேண்டும். 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த நோக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம்தான் இதில் வெற்றிபெற முடியும். இது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆளுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களை இந்த நோக்கத்தில் இணைக்க வேண்டும்.
முத்ரா திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்கள், தலித் பெண்கள் உள்ளிட்டோருக்கு கடன் வழங்க வங்கிகளை ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டில் சுற்றுப்புறச் சூழலில் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். அவர்களக்கு எனது பாராட்டுகள். சூரிய மின்திட்டம், மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது, யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுப்பது ஆகிய மத்திய அரசின் திட்டங்களில் ஆளுநர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com