காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்க ராகுலுக்கு உ.பி. பிரிவு அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பிரிவு வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பிரிவு வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து அந்த மாநில காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அமர்நாத் அகர்வால் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமையை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று கோரும் தீர்மானம், லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டுமன்றி, மாவட்டத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குத் தலைமையேற்றுப் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தெம்பையும், உற்சாகத்தையும் அளித்துள்ள, மகாத்மா காந்தியின் போதனைகளைப் பின்பற்றி நடக்கும் ராகுல் காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூட்டத்தில் பேசிய பிற தலைவர்களும், உழைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் விடிவெள்ளியாகத் திகழும் ராகுல் காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்தியாவை பாஜக-வின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசினர்.
அதனைத் தொடர்ந்து, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமர்நாத் அகர்வால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com