மகாத்மா காந்தி கொல்லப்பட்டதால் காங்கிரஸூக்கே பலன்: உமா பாரதி

மகாத்மா காந்தி கொல்லப்பட்டதால் காங்கிரஸ் கட்சியே அதிக பலனடைந்ததாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
மகாத்மா காந்தி கொல்லப்பட்டதால் காங்கிரஸூக்கே பலன்: உமா பாரதி

மகாத்மா காந்தி கொல்லப்பட்டதால் காங்கிரஸ் கட்சியே அதிக பலனடைந்ததாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பாஜக சார்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மத்திய அமைச்சர் உமா பாரதி கலந்துகொண்டார். அப்போது, அவரிடம், காந்தி கொலை வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். 
அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றது முதலாக, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். அதுகுறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்தால் ஒட்டுமொத்த நாடே பெரும் இழப்பை சந்தித்தது. ஜன சங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்), ஆர்எஸ்எஸ் ஆகியவையும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், அவரது படுகொலையால் பலனடைந்தது யார் என்று பார்த்தோமேயானால், அது கட்டாயம் காங்கிரஸ் மட்டும்தான்.
ஏனெனில், இந்தியா சுதந்திரமடைந்ததும் காங்கிரஸ் கட்சியைக் கலைக்கப்போவதாக காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி நிச்சயம் கலைக்கப்பட்டிருக்கும். எனவே, அவர் கொல்லப்பட்டதால் லாபமடைந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றார் உமா பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com