வங்கதேச, மியான்மர் எல்லைகளில் கூடுதல் கண்காணிப்பு: மத்திய அரசு உத்தரவு

வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளையொட்டியுள்ள எல்லைகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளையொட்டியுள்ள எல்லைகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளிலிருந்தும் ரோஹிங்கயா இன மக்கள், இந்தியாவுக்குள் வருவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மியான்மர் நாட்டில் சிறுபான்மையினராக வசித்து வருபவர்கள் ரோஹிங்கயா இன மக்கள். தற்போது, அந்த இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான ரோஹிங்கயாக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறை வெறியாட்டங்களிலிருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, லட்சக்கணக்கான ரோஹிங்கயா மக்கள், வங்கதேசத்திலும், இந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், இவ்வாறு தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கயாக்களை மீண்டும் மியான்மர் அரசங்காத்திடம் ஒப்படைப்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. ரோஹிங்கயா மக்களில் பெரும்பாலானோருக்கு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாலேயே இத்தகைய நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெளிவுப்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளையொட்டியுள்ள எல்லைகளில், கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிஎஸ்எஃப் படையினருக்கும், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படையினருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத ஊடுருவல்களைத் தடுக்கும் வகையில் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தமது உத்தரவில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com