கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மாதிரி வரைபடம் வெளியீடு

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக சந்தேகிக்கும் 3 நபர்களின் மாதிரி வரைபடத்தை சிறப்பு புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமைவெளியிட்டது.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மாதிரி வரைபடம் வெளியீடு

பெண் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கௌரி லங்கேஷ் தனது இல்லத்தின் வெளியே மர்ம நபர்களால் செப்டம்பர் 5-ம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் பல சிக்கல்கள் நீடித்தது. கௌரி லங்கேஷ் கொலையை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பத்திரக்கையாளர் என்ற முறையில் அவரது கொலைக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலைக்கான காரணத்தை கண்டறியும் விதமாக கர்நாடக காவல்துறையால் சிறப்புப் புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பின் பி.கே.சிங் கூறியதாவது,

நாங்கள் 200 முதல் 250 பேர் வரை இவ்வழக்கு தொடர்பாக விசாரித்தோம். அதில் கிடைத்த பலதரப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகிக்கும் கொலையாளிகள் குறித்த மாதிரி வரைபடத்தை வெளியிட்டுள்ளோம். இந்த வரைபடங்கள் 2 ஓவியர்களைக் கொண்டு வரையப்பட்டது.

இந்த ஓவியத்தின் அடிப்படையில் கொலையாளிகள் குறித்த முழு விவரம் தெரியவில்லை. அதுபோல கல்புர்கி என்ற எழுத்தாளர் கொலைச் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அதே ஆயுதங்கள் இவரது கொலையிலும் பயன்படுத்தப்பட்டதா என்பதும் சரிவரத் தெரியவில்லை.

இந்தக் கொலைத் திட்டம் தொடர்பாக அந்த கொலையாளிகள் சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை கௌரி லங்கேஷின் நடவடிக்கைகளை நோட்டம் விட்டிருக்கலாம். இதுதொடர்பாக விரைவில் ஒரு விடியோ பதிவையும் வெளியிட உள்ளோம்.

இந்த மாதிரி வரைபடத்தைக் கொண்டு சரியான குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்கள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com