ரேபிஸ் தடுப்பு மருந்துகளை சுயமாகத் தயாரிக்க கேரளம் திட்டம்

ரேபிஸ் தடுப்பு மருந்துகளை சுயமாகத் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.150 கோடியில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரேபிஸ் தடுப்பு மருந்துகளை சுயமாகத் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.150 கோடியில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவை முழுமையாக வெற்றியடையும்பட்சத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் பெண் குழந்தை ஒன்றை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.
இதற்கு நடுவே, ரேபிஸ் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநில கால்நடைத் துறை இயக்குநர் என்.என்.சசி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பயன்படுத்தப்படும் ரேபிஸ் தடுப்பு மருந்துகளை தனித்தனியே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் அரசு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ரூ.150 கோடி செலவில் அப்பணிகள் நடைபெற உள்ளன.
அவை முழுமையாக வெற்றியடைந்தால் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும். பிற மாநிலங்களுக்கு அவற்றை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர். ரேபிஸ் தடுப்பு மருந்துகளை ஒரு மாநில அரசு சுயமாகத் தயாரிக்க முன்வந்திருப்பது நாட்டிலேயே இது முதன்முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com