ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் 13 பேரின் படுகொலைக்கு தார்மிக பொறுப்பேற்பீர்களா?  கேரள முதல்வருக்கு அமித் ஷா கேள்வி

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் 13 பேரின் படுகொலைக்குத் தார்மிக பொறுப்பேற்க கேரள முதல்வர் 
ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் 13 பேரின் படுகொலைக்கு தார்மிக பொறுப்பேற்பீர்களா?  கேரள முதல்வருக்கு அமித் ஷா கேள்வி

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் 13 பேரின் படுகொலைக்குத் தார்மிக பொறுப்பேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தயாரா? என்று அமித் ஷா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை, படுகொலை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 தினங்களாக நடைபெற்றுவந்த யாத்திரை செவ்வாய்கிழமை நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள புத்ரிகண்டம் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த கட்சியினர் முன் அமித் ஷா பேசியதாவது:
சித்தாந்த ரீதியில் எங்களுடன் மோதுங்கள். வன்முறை மூலம் எங்களை நீங்கள் (மார்க்சிஸ்ட் கட்சியினர்) முற்றிலுமாக நீக்கிவிட முடியும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நிறைவேறாது. எங்களை கேரளத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்கள் உங்களை (பினராயி விஜயன்) தேர்வு செய்திருக்கிறார்களா? என்றார் அமித் ஷா.
முன்னதாக, பாலயம் பகுதியிலிருந்து புத்ரிகண்டம் மைதானம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆர்எஸ்எஸ்-பாஜகவினருடன் அமித் ஷா செவ்வாய்க்கிழமை யாத்திரை மேற்கொண்டார். கேரள மாநிலம், கண்ணனூரில் கடந்த 3-ஆம் தேதி அவர் யாத்திரையை அவர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் யாத்திரை கேரளத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும், சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com