தாய்மொழியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்: வெங்கய்ய நாயுடு

தாய்மொழிக்கான முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா சமிதியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற, காந்தியவாதி மற்றும் சமூக ஆர்வலர் நிர்மலா தேஷ் பாண்டேயின் 88 -ஆவது பிறந்த நாள் விழாவில் புனரமைக்கப்பட்ட தக்கர் பாபாவின் சிலையை
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா சமிதியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற, காந்தியவாதி மற்றும் சமூக ஆர்வலர் நிர்மலா தேஷ் பாண்டேயின் 88 -ஆவது பிறந்த நாள் விழாவில் புனரமைக்கப்பட்ட தக்கர் பாபாவின் சிலையை

தாய்மொழிக்கான முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா சமிதியில் காந்தியவாதி மற்றும் சமூக ஆர்வலர் நிர்மலா தேஷ் பாண்டேயின் 88 -ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவில், புனரமைக்கப்பட்ட தக்கர் பாபாவின் சிலையை திறந்து வைத்தும், சென்னை பெருவெள்ளம், புயலால் பாதிப்படைந்த தக்கர்பாபா சமிதிக்கு உதவியவர்களை கெளரவித்தும் வெங்கய்ய நாயுடு பேசியது: 
முதலில் தாய்மொழிக்கான முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்; அதேசமயம் மற்ற மொழிகளை கற்பதில் தவறில்லை. 
பிற மொழிகளை கற்கவில்லை என்றால் தென்னகத்திலேயே தேங்கிவிடுவோம். 
ஆனால், அந்த மொழிகளை கட்டாயத்தின் பேரில் கற்கக்கூடாது. தாய்மொழியை மட்டும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ரூ.5 லட்சம் நன்கொடை: காந்தியுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அவர் வழியில் வந்த காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டேவுடன் மாநிலங்களவையில் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 
ஏழை மக்களின் கல்வி, வாழ்வாதாரம் மேம்பட மிகவும் பாடுபட்டவர். குறிப்பாக தலித் இன மக்கள், மாணவ -மாணவிகளின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர். 
ஆகையால், அவரை நான் பெண் காந்தி என பெருமையோடு கூறுகிறேன் என்றார் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு. 
தக்கர் பாபா பள்ளியில் மகளிர் விடுதி கட்ட தனது சம்பளத்தில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் டி. ஜெயகுமார், ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் சங்கர் குமார் சன்யால், தக்கர் பாபா சமிதியின் தலைவர் எஸ்.பாண்டியன், செயலாளர் பி.மாருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com