மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, அந்த மாநிலத்தின் கராட் நகரப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள்.
மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, அந்த மாநிலத்தின் கராட் நகரப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தீபாவளிப் பண்டிகையையொட்டி தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நிலைமையை சமாளிக்க, முடிந்த அளவு பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட தனியார் பேருந்துகளை பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலப் போக்குவரத்து ஊழியர்களின் சங்கத் தலைவர சந்தீப் ஷிண்டே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவும், இடைக்கால நிவாரணமாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் வலியுறுத்தி, எங்களது 1.02 லட்ச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், உடனடியாக பணிக்குத் திரும்ப நாங்கள் தயாராக உள்ளோம்.
எங்களது வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெüகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மக்களுக்காக சேவையாற்றி வரும் எங்களின் வாழ்வாதாரத்தை மீட்க, அவர்கள் ஆதரவளிக்க வேண்டும்.
எங்கள் பிரச்னைகளைத் தீர்க்க முதல்வர் தேவேந்திர பட்நவீஸýம், போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவ்டேயும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்றாலும், எங்களுக்கு இறுதித் தீர்வுதான் தேவை என்றார் அவர்.
அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரி பர்வீன் குமார் கூறுகையில், ஊழியர்களின் போராட்டம் காரணமாக அனைத்து தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் நிறுவனப் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று எச்சரித்துள்ள போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை என்பதால் அந்தச் சேவையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்று பல்வேறு நீதிமன்றங்கள் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.
இந்த வேலைநிறுத்த விவகாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வரும் முதல்வர் தேவேந்திர பட்நவீஸýம், போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவ்டேயும், இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்காக குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம், ஆண்டுக்கு ரூ.450 கோடி இழப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com