ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிய பச்சிளங் குழந்தை; அரை மணி நேரமாக வழி விடாமல் அலைக்கழித்த கார் ஓட்டுநர் கூறிய காரணம்!

சுவாசக் கோளாறால் உயிருக்குப் போராடிய, பிறந்து சிறிது நேரமே ஆன பச்சிளங் குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் பாதைக்கு அரை மணி நேரமாக
ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிய பச்சிளங் குழந்தை; அரை மணி நேரமாக வழி விடாமல் அலைக்கழித்த கார் ஓட்டுநர் கூறிய காரணம்!

சுவாசக் கோளாறால் உயிருக்குப் போராடிய, பிறந்து சிறிது நேரமே ஆன பச்சிளங் குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் பாதைக்கு அரை மணி நேரமாகத் தடங்கல் தந்த கார் ஓட்டுநர் தனது செயலுக்கு விசித்திரமான விளக்கத்தைக் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் பெரும்பாவூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிர்மால் ஜோஸ் என்பவரே காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆம்புலன்ஸில் முன் பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் அவர் 3 கிமீ-களுக்கு வழியை அடைத்துக் கொண்டு சென்ற காட்சி பதிவாகி இருப்பதை வைத்து காவலர்கள் அந்த கார் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மது கூறுகையில், “சைரன் சத்தத்துடன் நான் தொடர்ச்சியாக பலமுறை ‘ஹாரன்’ அடித்தும் அந்த கார் வழி விடவில்லை, இதனால் 15 நிமிடத்தில் சென்றடைய வேண்டிய மருத்துவமனைக்கு 30 நிமிடங்கள் தாமதமாக செல்ல நேர்ந்தது” என்றார்.

ஐ.சி.யு-வில் குழந்தையை அனுமதித்தப்பட்ட பிறகு இந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் காரை கைப்பற்றிய காவல் துறை ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் தான் ஆம்புலன்ஸிற்கு வழி ஏற்படுத்துவதற்காகவே ‘பைலட்டாக’ முன் சென்றதாக கூறியுள்ளார். அவர் கூறிய இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள காவல் துறை மறுத்துள்ளது.

“யாராவது ஆம்புலன்ஸுக்கு பைலட்டாக வருவார்களா? அவர் வழி விட்டிருந்தாலே விரைவாக மருத்துவமனைக்குச் சென்றிருக்க முடியும். மேலும் ஆம்புலன்ஸில் இருந்த குழந்தைக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று ஓட்டுநர் மது கூறியுள்ளார்.

கைது செய்த சிறிது நேரத்திலேயே பெயிலில் நிர்மல் வெளியில் வந்தார். ஆனால் அவரது கார் இன்னமும் காவலர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அம்புலன்ஸிற்கு பைலட்டாக சென்றேன் என்பதெல்லாம் நீதிமன்றத்தில் அவருக்கு விடுதலையை வாங்கித் தராது என்று ஆர்.டி.ஓ. அய்யப்பன் கூறியுள்ளார். விரைவில் இவருடைய ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com