2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை

வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கோவா ஃபார்வர்டு கட்சி அறிவித்துள்ளது.

வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கோவா ஃபார்வர்டு கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கோவாவில் மட்டும் எங்கள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். ஆதலால் 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை எங்கள் கட்சி ஆதரிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது. அந்தத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது என்றார் அவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரவாதி கோமந்தக கட்சி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சர்தேசாய் பதிலளிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி எதுவானாலும், அக்கட்சி முதலில் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். அதன்பிறகே, தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்றார்.
கோவா மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த 2 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. கோவாவை ஆளும் பாஜக கூட்டணியில் கோவா ஃபார்வர்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் சர்தேசாய் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com