ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்': மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு! 

ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்' ஆகத்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்': மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு! 

காந்தி நகர்: ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்' ஆகத்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் ஓ.பி.சி வகுப்பினருக்காக 'தாகூர் சேனா' என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் இளம் தலைவரான அல்பேஷ் தாகூர், இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த நிகழ்வில் ராகுல் பேசியதாவது:

கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி வெளியிட்ட பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஒற்றை அறிவிப்பால் ஒட்டு மொத்த  இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.  அதேபோல டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் கருப்பு பண பிரச்சினையினை தீர்க்காவிடில் என்னைத் தூக்கில் இடுங்கள் என்று கூறினார். இவ்வாறு அவர் ஒட்டு மொத்தமாக இந்திய பொருளாதாரத்தினையே சிதைத்திருக்கிறார். அத்துடன் நிறுத்தாமல் அடுத்து அவர் கொண்டு வந்ததுதான் ஜி.எஸ்.டி.

நாங்கள் அதனை நாடு முழுமைக்கும் குறைவான அளவாக 18 சதவீதம் என்பதாக , ஒற்றை படிவம் கொண்டதாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டோம். ஆனால் தற்போதைய பாஜக அரசு அதனை அதிகபட்சமாக 28 சதவீதம் என்ற அளவுடன் மூன்று படிவங்கள் கொண்டதாக உருவாக்கியுள்ளது.

சுருக்கமாக சொல்வது என்றால் ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்' ஆகத்தான் இருக்கிறது. (பிரபல இந்தி திரைப்படமான 'ஷோலே' வின் வில்லன் கதாபாத்திரப் பெயர்)

குஜராத்தின் பட்டிடார் சமூக தலைவரான நரேந்திர பட்டேலுக்கு பாஜக ரூ.1 கோடி கொடுத்து இழுக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் இந்தியாவின் மொத்த நிதியினையோ அல்லது உலகின் எல்லா வளத்தினையும் கொடுத்து வாங்க நினைத்தாலும், குஜராத்தின் இத்தகைய குரல்களை விலைக்கு வாங்கவோ அல்லது அடக்கி வைக்கவோ இயலாது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com