கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: கடன் தொல்லையால் நிகழ்ந்த கொடூரம்! 

வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாத கணவனை கொல்ல வந்த கூலிப்படையினரால், கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே, இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: கடன் தொல்லையால் நிகழ்ந்த கொடூரம்! 

புதுதில்லி: வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாத கணவனை கொல்ல வந்த கூலிப்படையினரால், கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே, இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

தில்லியின் பகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா. இவரது மனைவி ப்ரியா மெஹ்ரா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் தங்களது காரில் செவ்வாய் இரவு ஷாலிமர் பாக் என்னும் பகுதியில் உள்ள சீக்கிய குருத்துவரா ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இவர்கள் காரினை முந்திச் சென்ற கார் ஒன்று அவர்களை கடந்து நிறுத்தபட்டது. அதில் இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியால் பங்கஜினை  நோக்கி சரமாரியாக சுட்டனர். ஆனால் அவர்களது துப்பாக்கிச் சூட்டில் ப்ரியாவின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பங்கஜும் , அவரது இரண்டு வயது மகனும் தப்பி விட்டனர்.

பின்னர் உடனடியாக ப்ரியாவினை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மருத்துவமனை மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் ப்ரியா உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மருத்துவமனையில் ப்ரியா அனுமதிக்கப்பட்ட பொழுது போலீசார் வந்த பின்னர்தான் சிகிச்சை அளிக்க  முடியும் என்று மருத்துவர்கள் காலம் தாழ்த்தினர் என்றும், அதே நேரத்தில் தங்களது எல்லை வரம்பிற்கு உட்படவில்லை என்று முதலில் போலீஸாரும் வர மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.       

ப்ரியாவின் கணவர் பங்கஜ் தனது வியாபார வளர்ச்சிக்காக சிலரிடம் பெற்றிருந்த கடனைத் திரும்பிச் செலுத்த தவறியதால் அவர் மீது நடத்த முயன்ற தாக்குதலில் ப்ரியா பலியாகி விட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com