இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9, 14-ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தல்!

வரும் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9, 14-ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தல்!

புதுதில்லி: வரும் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால், தில்லியில் இன்று தேர்தல் ஆணையம் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது.

அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் அக்ஸல் குமார் ஜோதி மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் செய்தியாளர்களை இன்று காலை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

குஜராத் சட்டப் பேரவையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. இந்த தேர்தலில் 4.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 50,128 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இது கண்டிப்பாக கடந்த பேரவை தேர்தலை விட அதிகமாகும். இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரை செலவு செய்யலாம்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 9, 14 -ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக  நடைபெறும். தேர்தல் அட்டவனை பின்வருமாறு:

முதல் கட்டம்

வாக்குப் பதிவு: டிசம்பர் 9, 2017

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 18, 2017 

முதல் கட்டம்

வாக்குப் பதிவு: டிசம்பர் 14, 2017

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 18, 2017 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதினைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ன்னதாக நவம்பர் 9-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12-ஆம் தேதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com