ஒரு கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் ஒரே பிறந்த நாள்: ஆதார் குழப்பங்கள்! 

ஒரு கிராமத்தைச் சேர்ந்த 800 பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளிலும், ஜனவரி 1-ம் தேதி பிறந்தநாள் என்று ஒரே மாதிரியாக அச்சடிக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஒரு கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் ஒரே பிறந்த நாள்: ஆதார் குழப்பங்கள்! 

ஹரித்வார்: ஒரு கிராமத்தைச் சேர்ந்த 800 பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளிலும், ஜனவரி 1-ம் தேதி பிறந்தநாள் என்று ஒரே மாதிரியாக அச்சடிக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவான அடையாள அட்டையாக ஆதாரை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறவும் ஆதார் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் ஆதார் அட்டையில் குறிப்பிடப்படும் விபரங்களில் தவறுகள் நிகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த 800 பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளிலும், ஜனவரி 1-ம் தேதி பிறந்தநாள் என்று ஒரே மாதிரியாக அச்சடித்து வழங்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலையில் உள்ள கிராமம் கைந்தி கதா. இங்கு  வன் குஜ்ஜார் என்ற இனத்தை சேர்ந்த 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அண்மையில் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதில் அங்கு வசிக்கும் முகமது கான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் அவரது பிறந்த தேதி தவறுதலாக ஜனவரி 1 என அச்சடிக்கப்பட்டிருந்தது. பின்னர் சோதித்த பொழுது இவருக்கு மட்டுமல்ல அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அலாப்தின் என்பவரின் ஆதார் அட்டையிலும் ஜனவரி 1 தான் பிறந்த தேதி என்று அச்சிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இன்னும் தீவிரமாக விசாரித்த பொழுதுதான் அந்த கிராமத்தை சேர்ந்த 800 குடும்பத்தினருக்கும் ஜனவரி 1 என ஒரே பிறந்த தேதி அச்சடிக்கப்பட்டுள்ள விவகாரம் வெளியே வந்தது.

இதே போல சம்பவங்கள் ஆக்ரா அருகில் உள்ள 3 கிராமங்கள், ராஜஸ்தான் மாநிலம், போக்ரான் அருகே உள்ள  பாகுபாடியா என்னும் கிராமம் ஆகிய இடங்களிலும் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com