நியூசிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்
நியூசிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 தொடரை கைப்பற்றியது. 

முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர் ஷிகர் தவன் 14 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார். பின்னர் 2-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஜோடி அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டது. இருவரும் சதம் விளாசினர். 

ரோஹித் ஷர்மா 138 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 147 ரன்கள் குவித்தார். விராட் கோலி 106 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 113 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த தோனி 25 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் கான்பூர் மைதானத்தில் நடந்த 15 போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. அதுபோல ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டைச் சதம் குவித்த ஜோடிகளாக விராட் கோலி, ரோஹித் ஷர்மா புதிய சாதனைப் படைத்தனர். இந்த ஜோடி ஒருநாள் போட்டிகளில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தைப் பிடித்தது. சச்சின், கங்குலி ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும், கம்பீர், கோலி ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும், தரங்கா, ஜெயவர்தனே ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும் குவித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னே, டிம் சௌதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 

துவக்க வீரர்களாக குப்தில் - கோலின் மன்றோ களமிறங்கினர். குப்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் - கோலின் மன்றோ ஆகியோ் இந்தியாவின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதையடுத்து இந்தியா 6 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டித் தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கோலின் மன்றோ 75, லதாம் 65 வில்லியம்சன் 64 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் பூம்ரா 3, சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com