ஆச்சரியங்களை ஏற்படுத்தும் மோடியின் திறன் குறையவில்லை: ஒமர் அப்துல்லா

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், "ஆச்சரியங்களை ஏற்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் திறன் குறையவில்லை' என்று தெரிவித்தார்.
ஆச்சரியங்களை ஏற்படுத்தும் மோடியின் திறன் குறையவில்லை: ஒமர் அப்துல்லா

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், "ஆச்சரியங்களை ஏற்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் திறன் குறையவில்லை' என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் ஞாயிற்றுக்கிழமை காலை எவ்வாறு மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) ஒருவர் பதிவு வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சுட்டுரையில் ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியில் பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஆச்சரியங்களை நிகழ்த்துவதில் பிரதமர் மோடியின் திறன் குறையவில்லை. அவரைப் பற்றி தொடர்ந்து அதிகம் பேச வைக்கிறார்.
வர்த்தகத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்ததன் மூலம் பாலின சமத்துவத்தை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியிருக்கிறார். நிர்மலா இந்தப் பதவிக்கு தகுதி கொண்டவராவார். புதிய பொறுப்பை சிறப்பாக வகிக்க அவருக்கு எனது வாழ்த்துகள்.
இதேபோல், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டுள்ள ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் சிறந்த தேர்வு.
ரயில்வே துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல், ஜம்மு-காஷ்மீரில் கட்ரா-பனிஹால் இடையே ரயில் பாதையை ஏற்படுத்துவார் என நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com