ஆதிவாசிப் பெண்ணை ஏழு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்த மத்திய படை வீரர்கள்! (விடியோ இணைப்பு) 

காய்ச்சலில் நடக்க இயலாமல் அவதிப்பட்ட ஆதிவாசிப் பெண்ணை, சிகிச்சைக்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு கிலோமீட்டர்கள் தூரம் தோளில் சுமந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
ஆதிவாசிப் பெண்ணை ஏழு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்த மத்திய படை வீரர்கள்! (விடியோ இணைப்பு) 

ராய்பூர்: காய்ச்சலில் நடக்க இயலாமல் அவதிப்பட்ட ஆதிவாசிப் பெண்ணை, சிகிச்சைக்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு கிலோமீட்டர்கள் தூரம் தோளில் சுமந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் பொதுவாகவே நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே இங்கு அதிக அளவில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருப்பார்கள். மக்களுக்கு வசதிகள் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் அடர்ந்த வனப் பகுதியில் வசித்து வந்த ஆதிவாசிப் பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாகனங்களும் அந்தப் பகுதியில் செல்ல முடியாது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அந்தப் பெண்ணை தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர் ஒன்றில்  வைத்து, தோளில் சுமந்து நடந்து, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொண்டு சேர்த்தனர்.

மத்திய பாதுகாப்பு படையினரின் இந்த மனிதநேயம் மிக்க இந்த செயலானதுஅனைவராலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com