தேரா சச்சா தலைமையகத்தில் நுழைய போலீஸ் தயங்குவது ஏன்?

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் தேரா சச்சா செüதா அமைப்பின் தலைமையகத்துக்குள் போலீஸôர் செல்வார்கள் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் விளக்கமளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் தேரா சச்சா செüதா அமைப்பின் தலைமையகத்துக்குள் போலீஸôர் செல்வார்கள் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் விளக்கமளித்துள்ளார்.

ஹரியாணாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா செüதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக, அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது அவரது அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 35 பேர் உயிரிழந்தனர். தேரா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சாவில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தை மையமாகக் கொண்டுதான் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் ஏற்கெனவே மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு குவிந்திருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் போலீஸôர் சோதனை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:
தேரா சச்சா தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அடுத்து மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளை பஞ்சாப்}ஹரியாணா உயர் நீதிமன்றம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், போலீஸôர் தங்கள் விருப்பப்படி அனைத்து இடங்களுக்கும் சென்று சோதனை மேற்கொள்ள முடியாது.
எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உரிய உத்தரவுப்படிதான் தேரா அமைப்பின் தலைமையகத்தில் போலீஸôர் சோதனை நடத்த முடியும். மேலும், தேரா அமைப்பின் தலைமையகம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு சோதனை நடத்த தனி நீதிபதி நியமிக்கப்பட்டால்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com