ராஜபுத்திரர்களின் வாக்குகளை தக்கவைக்க அமைச்சரவை மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் வகையில் மத்திய அமைச்சரவை மாற்றம் அமைந்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் வகையில் மத்திய அமைச்சரவை மாற்றம் அமைந்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோருக்கு மத்திய விளையாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர், செய்தி ஒலிபரப்புத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமூகத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு வேளாண்மைத் துறை இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது ராஜஸ்தானில் ராஜபுத்திர சமூகத்தினர் மத்தியில் சரிந்துள்ள பாஜகவின் செல்வாக்கை சீராக்க உதவும் என்று அந்த மாநில பாஜகவின் கூறியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் ராஜஸ்தானில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ரெüடி ஆனந்த்பால் சிங், போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ராஜபுத்திர சமூகத்தினர், அடுத்த ஆண்டு நடைபெறும் ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்றனர்.
இந்நிலையில், அவர்கள் சமூகத்துக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பாஜகவின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க உதவும் என்று கருதப்படுகிறது.
ராஜஸ்தானில் 8 முதல் 10 சதவீத வரை ராஜபுத்திர சமூகத்தினர் உள்ளனர். மேலும், அவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். ராஜஸ்தான் பேரவையில் 28 எம்எல்ஏக்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com