ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிக்கித் தவித்த பயணியர்: முதல் நாளிலேயே 'லக லக' ஆக்கிய லக்னோ மெட்ரோ! 

பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே துவக்கப்பட்ட லக்னோ மெட்ரோ ரயில் சேவையின் முதல் நாளான இன்றே , நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ...
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிக்கித் தவித்த பயணியர்: முதல் நாளிலேயே 'லக லக' ஆக்கிய லக்னோ மெட்ரோ! 

லக்னோ: பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே துவக்கப்பட்ட லக்னோ மெட்ரோ ரயில் சேவையின் முதல் நாளான இன்றே , நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வண்டியின் உள்ளே சிக்கித் தவித்த சம்பவம் நிகழ்ந்த்து உள்ளது.

உத்தர பிரதேச மாநில தலைநகரங்களில் ஒன்றான லக்னோவில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது.  பணிகள் முடிந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை நேற்று துவங்கி வைக்கப்பட்டது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மாநில ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயிலின் பொது பயன்பாட்டு சேவையானது இன்று துவங்கியது.

லக்னோவில் டிரான்ஸ்போர்ட் நகர் என்னுமிடத்திலிருந்து 8.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்பஹ் என்னும் இடத்துக்கு இன்று காலை ஒரு சேவை துவங்கியது. இந்த ரயிலானது மவையா என்னும் இடத்திற்கு அருகில் வந்த பொழுது ரயில் திடீர் என்று நின்று விட்டது. அத்துடன் ரயிலில் உள்ள மின்சாரம் மற்றும் குளிரசாதன வசதிகள் அப்படியே துண்டிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக பயணிகள் உள்ளே சிக்கித் தவித்தனர்  

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் பரிதவித்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் அங்கு தவித்து வந்தனர். இறுதியில்  'லக்னோ மெட்ரோ ரயில் நிறுவன அமைப்பிலிருந்து ஊழியர்கள் வந்து அவர்களை அவசர வழி மூலம் மீட்டனர்.

இது தொடர்பாக கருது தெரிவித்த 'லக்னோ மெட்ரோ ரயில் நிறுவன; அதிகாரி ஒருவர், 'இந்த ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டும் எதோ தொழில்நுட்ப கோளாறு நிகழ்ந்துள்ளது. அதனை சரி செய்து வருகிறோம். இதர பாதைகளில் ரயில்கள் ஒழுங்காக இயங்குகின்றன' என்று தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com