மும்பை: நாயின் உயிரைக் காக்க புறநகர் ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!

நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில், தண்டவாளத்தில் அசையாமல் நின்றிருந்த நாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக புறநகர் ரயிலை அதன் ஓட்டுநர் நிறுத்தினார்.

நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில், தண்டவாளத்தில் அசையாமல் நின்றிருந்த நாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக புறநகர் ரயிலை அதன் ஓட்டுநர் நிறுத்தினார்.
மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் புறநகர் ரயில் ஒன்று வந்தது. அப்போது, தண்டவாளத்தில் நாய் ஒன்று நின்றிருந்தது. அதை அங்கிருந்து நகரச் செய்வதற்காக அந்த ரயிலின் ஓட்டுநரான பி.சி.மீனா, ஹாரனை ஒலிக்கச் செய்தார். ஆனாலும், அந்த நாய் அங்கிருந்து நகர்ந்து செல்லவில்லை. இதனால், ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரனை ஒலித்தும் நாய் அசைந்து கொடுக்கவில்லை. எனினும், அந்த ஒலி நடைமேடையில் இருந்த பிடிஐ செய்தியாளர் ஒருவர் உள்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 
தண்டவாளத்தை விட்டு நாய் நகர்ந்து செல்லாததைத் தொடர்ந்து, ரயிலை ஓட்டுநர் மீனா நிறுத்தினார். அப்போது, நடைமேடையில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஒரு பயணி அங்கிருந்து தண்டவாளத்தில் இறங்கினார். அவர் அந்த நாயைத் தூக்கிச் சென்று, பத்திரமான இடத்தில் விட்டார். அங்கு திரண்டிருந்த பயணிகள் அனைவரும் கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், நாயின் உயிரைக் காப்பதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மீனாவுக்கு பாராட்டு தெரிவிக்கவும் பயணிகள் விரைந்து சென்றனர். இது குறித்து மீனா, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், 'ஒரு நாளில் நான் செய்யும் வேலையில் இதுவும் ஒன்றுதான்' என்றார். மிகச்சிறந்த செயலைத் தாங்கள் ஆற்றியுள்ளீர்கள் என்று கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, நான் செய்தது ஒன்றுமே இல்லை என அவர் தன்னடக்கத்துடன் தெரிவித்தார். 
அதன்பின், ஐந்தறிவு ஜீவன் ஒன்றுஉயிர் தப்பியது என்ற நிம்மதியுடன் பயணிகள் அனைவரும் அந்த ரயிலில் ஏறிப் புறப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com