வந்தே மாதரம் பாட தகுதி இருக்கிறதா? பிரதமர் மோடி கேள்வி

தூய்மை இந்தியா திட்டத்துக்கு தனது வலுவான ஆதரவை சேர்க்கும் வகையில், 'பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு வந்தே மாதரம் பாடல்பாட தகுதி இருக்கிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று ஏராளமான மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, சாலையோரங்களில் எச்சில் துப்பி, குப்பைகளைக் கொட்டும் இந்தியர்களுக்கு வந்தே மாதரம் பாடல் பாட தகுதியே இல்லை. யார் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த நாட்டில் முதல் உரிமை உள்ளது என்றார்.

மேலும், 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய சுவாமி விவேகானந்தா, புத்தாக்கத்தையும், நிகரில்லா அறிவு மற்றும் திறமைக்கும் ஆதரவு தெரிவித்தார். அவரது பாதையில்தான் என்னுடைய அரசு பயணிக்கிறது. நம்மை உலகம் தற்போது எப்படி இருக்கிறோமோ அதை வைத்துத்தான் மதிப்பிடுமே தவிர, 5000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோம் என்று பார்த்து மதிப்பிடுவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com