இந்தியாவை தூய்மையாக மாற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி வலியுறுத்தல்

இந்தியாவைத் தூய்மையாக மாற்ற முயற்சியெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும்
இந்தியாவை தூய்மையாக மாற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி வலியுறுத்தல்

இந்தியாவைத் தூய்மையாக மாற்ற முயற்சியெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் தூய்மையே சேவை என்ற பிரசார இயக்கத்தை மிகப்பெரிய வெற்றியாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்தியில் கடந்த 2014இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ளது.
அதையடுத்து, வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான 15 நாள்களும் தூய்மை தினங்களாகக் கொண்டாடப்பட உள்ளன. தூய்மையே சேவை என்ற பெயரிலான இந்தப் பிரசார இயக்கத்தை மிகப்பெரிய வெற்றியாக்குமாறு பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக பொது இடங்கள், சுற்றுலாத் தலங்கள், சந்தைகள், சிலைகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்துக்குப் பின் நடைந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், தூய்மைப் பணிகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்குமாறு அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தூய்மையான இந்தியாவை உருவாக்க உண்மையான முயற்சிகளை எடுக்குமாறு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, அதிகாரிகளும் சில மணிநேரங்களுக்கு தங்களது உழைப்பை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com