நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டது.இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-ஸ்ரீநகர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-ஸ்ரீநகர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உதம்பூர் மாவட்டத்தின் மோர் பஸ்ஸி பகுதியில் உள்ள பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாலம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை மூடப்பட்டது. நிலச்சரிவை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த நெடுஞ்சாலை தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையுடன் மூடப்பட்டது. இதனிடையே, ராம்பன் மாவட்டம், ராம்சு பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. சீரமைப்புப் பணிகள் எப்போது முடியும் என்று தெரியாது.
சாலையில் சில வாகனங்கள் மட்டுமே அணிவகுத்து நிற்கின்றன. மற்ற வாகனங்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com