சேவை வாக்காளர் முறையில் பாலின பாகுபாடு கூடாது: தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களை, தேர்தலில் வாக்களிக்க வகைசெய்யும் சேவை வாக்காளர் முறையில் 

வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களை, தேர்தலில் வாக்களிக்க வகைசெய்யும் சேவை வாக்காளர் முறையில் 
(SERVICE VOTERS)  பாலின பாகுபாட்டை களைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, வெளிமாநிலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள், ஆயுதப்படையினர், மத்திய ஆயுதப்படை போலீஸார் மற்றும் வெளிநாடுகளில் பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் ஆகியோர் 'சேவை வாக்காளர்' பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலோ அல்லது மக்களவைத் தேர்தல்களிலோ தாங்கள் பணிபுரியும் இடத்திலிருந்தே வாக்களிக்க முடியும். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களின் துணைவியரும் இந்த சேவை வாக்காளர் முறையின்படி வாக்களிக்கலாம். ஆனால், மேற்குறிப்பிட்ட சேவை வாக்காளர், ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில், அவரது கணவரால் இந்த நடைமுறைப்படி வாக்களிக்க முடியாது. இதனால், லட்சக்கணக்கானோர் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் வேண்டுகோள்: இந்நிலையில், சேவை வாக்காளர் நடைமுறையில் நிலவும் இந்த பாலின பாகுபாட்டை களையும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுர வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தில்லியில் சேவை வாக்காளர்கள் தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த வேண்டுகோளை விடுத்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com